தலவாக்கலையில் மண்சரிவு அபாயம்: மக்கள் ஆர்ப்பாட்டம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள தலவாக்கலை வனிகசேகரபுர குடியிருப்பாளர்கள் தலவாக்கலை நகரில் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

தலவாக்கலை நகரசபைக்கு உட்பட்ட மேல்கொத்மலை நீர்தேக்க கரையோரத்தை அண்மித்த வனிகசேகரபுர வீட்டுத்திட்ட குடியிருப்பாளர்களே இன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவர் அசோக சேபால கருத்து தெரிவித்த போது,

“மேல்கொத்மலை நீர்தேக்க கரையோரத்தை அண்மித்த தலவாக்கலை நகரசபைக்கு உட்பட்ட வனிகசேகரபுரம் 80 குடியிருப்புகளுடன், மதஸ்தலங்களை கொண்ட குறித்த குடியிருப்பு பகுதியில் பல தடவைகள் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட குடியிருப்பு பகுதியை அண்மித்து செல்லும் மேல் கொத்மலை நீர்தேக்க கரையோர பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் மாத்திரமே பாதுகாப்பு மதில் அமைக்கப்பட்டுள்ளது.

காலநிலை சீர்கேட்டினால் மலையகத்தில் பல பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் வனிகசேகர புர குடியிருப்பு பகுதிகளில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் மண்சரிவுகள் ஏற்பட்டு குறித்த பிரதேசம் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

எனவே, மேல் கொத்மலை திட்ட பொறுப்பதிகாரிகள் உடனடியாக கரையோர பகுதியில் பாதுகாப்பு மதில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது பாதுகாப்பான இடத்தில் வனிகசேகரபுர குடியிருப்பாளர்களுக்கு வீட்டுத்திட்டத்தை அமைத்து கொடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.