இலங்கை வந்துள்ள இங்கிலாந்து வீரர்களின் மனிதாபிமானம்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி வீரர்களின் மனிதாபிமான செயற்பாடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

வீரர்களின் பயிற்சி நடவடிக்கையை இளைஞர் ஒருவர் நீண்ட நேரம் பார்வையிட்டுள்ளார். சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக குறித்த இளைஞன் அதே இடத்தில் நின்று பயிற்சி நடவடிக்கையை பார்த்துள்ளார்.

இதனை அவதானித்த இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட், குறித்த இளைஞனுடன் உரையாடலில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் ஜோ ரூட் தனது பாதணிகளை குறித்த இளைஞனுக்கு பரிசாக வழங்கிவிட்டு தான் வெறும் காலி நின்றுள்ளார்.

குறித்த இளைஞனுடன் ஜோ ரூட் புகைப்படம் ஒன்றையும் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இதேவேளை, இங்கிலாந்து அணி வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலை துப்பரவு செய்யும் ஊழியர்களை உட்பட இங்கிலாந்து வீரர்கள்,“சர்” “மேடம்” என மரியாதையாக அழைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜென்டில்மென் வீரர்கள் என வர்ணிக்கப்படும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் போட்டியில் மாத்திரமின்றி மனிதாபிமானத்திலும் சிறந்து காணப்படுவதாக பேஸ்புக் பக்கத்தில் பதிவுகள் இடப்பட்டுள்ளது.