மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு! ஒருவர் படுகாயம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

மாளிகாவத்தை வை.எம்.எம்.ஏ. மாவத்தையில் இன்று மாலை இடம்பெற்ற இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

23 வயதுடைய இளைஞன் ஒருவரே குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 12ஆம் திகதி மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இலக்கான இளைஞன் ஒருவர் மீதே மீண்டும் இன்றைய தினம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

காயமடைந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.