முள்ளியவளை, மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப்பணிகள் ஆரம்பம்

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு - முள்ளியவளை, மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப்பணிகள் ஆரம்பமாகியுள்ளது.

அப்பகுதி மக்கள் பலர் ஒன்றுகூடி இன்றைய தினம் முள்ளியவளை துயிலுமில்லப் பகுதியில் துப்பரவுப் பணிகளை மேற்கொண்டனர்.

இவர்களுடன் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.