இலங்கையை உலுக்கிய கண்டி, திகன வன்முறை! விரைவில் வெளிவரவுள்ள பின்னணி

Report Print Jeslin Jeslin in சமூகம்

கண்டி - திகன பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம், அதன் பின்னணித் தொடர்பான அறிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில், கடந்த மே மாதம் 9அம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணையாளர்களினால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த விசாரணைகளின் பின்னர், குறித்த சம்பவம் தொடர்பில் பொதுமக்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த அறிக்கையை தயாரித்ததன் பின்னர், அதனை வெளிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.