இலங்கை தமிழரசு கட்சியின் நில அதிகாரமும் அதிகாரப்பகிர்வும் சிறப்பு பேருரை நிகழ்வு

Report Print Mohan Mohan in சமூகம்

இலங்கை தமிழரசு கட்சியின் திட்டமிடலில் இடம்பெறும் நில அதிகாரமும் அதிகாரப்பகிர்வும் சிறப்பு பேருரை நிகழ்வு இன்று ஒட்டுசுட்டான் பகுயில் இடம்பெற்றுள்ளது.

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ.சுமந்திரன், வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், ஆ.புவனேஸ்வரன் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ. பிறேமகாந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.