தோட்ட தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்போம்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஓர் அழைப்பு

Report Print Arivakam in சமூகம்

தமது நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக்கக்கோரி மலையக மக்கள் முன்னெடுத்துவரும் தொடர்ச்சியான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் கிளிநொச்சியிலும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக எதிர்வரும் 24ஆம் திகதி காலை 09.30 மணியளவில் குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

நாகரிகம் வளர்ந்து விட்ட இந்த உலகிலே வெறும் தொழிலாளர்களாக, முதலாளிகளுக்கு வெறும் இலாபத்தை ஈட்டி கொடுக்கிறவர்களாக இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தினுடைய முதுகெலும்பாக எமது உறவுகளான மலையக தொழிலாளர்கள் இருக்கின்றார்கள்.

இந்நிலையில் தோட்டத்தொழிலாளர்களால் நடத்தப்படுகின்ற போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு கிளிநொச்சியில் நடைபெறும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட காரியாலயம் அழைப்பு விடுத்துள்ளது.