250 கோடி ரூபாவிற்கு காணி வாங்கும் அமைச்சர்! அரசியல் மட்டத்தில் சலசலப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

கண்டியில் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியில் காணி ஒன்றை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் அமைச்சர் ஒருவர் ஈடுபட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அந்தப் பகுதியிலுள்ள ஏரியை சுற்றியுள்ள ஆறு ஏக்கர் காணி 250 கோடி ரூபாய் பெறுமதியில் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

இது தொடர்பில் கண்டி நகரத்தின் பிரதான தரப்பு வர்த்தகர்களுடன் தற்போது அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பினாமியின் பெயரில் காணியை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

ஊவா மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரே இவ்வாறு காணியை கொள்வனவு செய்யவுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

பினாமி பெயரில் இத்தனை கோடி ரூபாவிற்கு காணி கொள்வனவு செய்யும் அமைச்சரின் சொத்து மதிப்பு பல ஆயிரம் ரூபாவை தாண்டும் என குறிப்பிடப்படுகிறது.