கொழும்பிலிருந்து பயணித்த புகையிரதங்களில் மோதி பறிபோன இரு உயிர்கள்

Report Print Ajith Ajith in சமூகம்

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதங்களில் மோதி இரண்டு காட்டு யானைகள் பலியாகியுள்ளன.

அத்துடன், மேலும் ஒரு காட்டு யானை காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் அம்பன்பொல பகுதியில் வைத்து நேற்றிரவு இரண்டு காட்டு யானைகள் மோதுண்ட நிலையில், அவற்றில் ஒன்று உயிரிழந்துள்ளது.

அத்துடன், மற்றுமொரு காட்டு யானை பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இதேவேளை, கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் பலுகஸ்வௌ பகுதியில் வைத்து மோதுண்ட காட்டு யானை ஒன்றும் பலியாகியுள்ளது.

Latest Offers