மலையக மக்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம்

Report Print Rakesh in சமூகம்

மலையக மக்களின் சம்பள பிரச்சினைக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இன்று காலை 9.30 மணிக்கு போராட்டமொன்று நடத்தப்படவுள்ளது.

குறித்த போராட்டம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலையக தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் இந்த போராட்டம் 'உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமும் கைகோர்ப்போம்' எனும் தொனிப்பொருளில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.