சொகுசு காரில் பயணித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவருக்கு நேர்ந்த நிலை

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, ஓமந்தை பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் பிரதான போதை மாத்திரை விநியோகத்தர் உள்ளிட்ட இருவர் சொகுசு காரில் பயணித்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 2,600 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் நேற்று மாலை ஏ9 வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த வெள்ளிக்கிழமை 1670 போதை மாத்திரைகளுடன் யாழில் இருந்து திருகோணமலை சென்ற இரு இளைஞர்களை ஓமந்தை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

அவர்களை நீதிமன்றில் முற்படுத்தி, மேலதிக விசாரணைக்காக ஓமந்தை பொலிஸார் தமது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் யாழில் இருந்து 2600 போதை மாத்திரைகளுடன் சொகுசு காரொன்றில் ஏ9 வீதியில் பயணித்த பிரதான விநியோகத்தர் உள்ளிட்ட இருவரும் வசமாக சிக்கியுள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த ஓமந்தை பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் 34 மற்றும் 23 வயதுடைய யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.

Latest Offers