இலங்கையில் தங்கத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தங்க விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமகால அரசாங்கத்தின் வரிக் கொள்கைகள் காரணமாக, இரத்தினக்கல் மற்றும் தங்க நகை துறைக்கு பாரிய அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.

தங்கத்திற்காக விதிக்கப்பட்டுள்ள வரி காரணமாக சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வரும் நடவடிக்கை அதிகரித்துள்ளதாக சபை தலைவர் பேஷல ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இரத்தின கல் மற்றும் தங்க நகை துறையின் வருமானம் வருடாந்தம் 1000 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகும். எனினும் தற்போது அதன் அளவு 350 மில்லியன் ரூபாய் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers