அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி: ஐ.தே.கட்சி

Report Print Steephen Steephen in சமூகம்

நல்லாட்சி அரசாங்கத்தின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் தேர்தல்களை கண்டு அஞ்சவில்லை. தேர்தல் நடத்தப்பட வேண்டும். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியே போட்டியிடுவார்.

மக்களின் நிலைப்பாட்டை எதிர்கொள்ள நாம் பழகிக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ஜோன் அமரதுங்க ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை அமைச்சர் மனோ கணேசனும் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பன்னிப்பிட்டிய தெபானம பிரதேசத்தில் நேற்று கருத்து வெளியிட்டிருந்தார்.

அடுத்த தேர்தலுக்கு பின்னர் ஜனாதிபதியை விட பிரதமர் அதிகாரம் கொண்டவராக இருப்பார் எனவும் இதனால், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமரை தெரிவு செய்யவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஜனாதிபதி ஒருவரையும் தெரிவு செய்யவும் தயாராக வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள், அரசாங்கத்திற்கு ஆதரவான எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்த ஒரு பொதுவான கூட்டணியின் கீழ் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் நிறுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.