தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கோரிகைக்கு ஆதரவாக கிழக்கில் ஆர்ப்பாட்டம்

Report Print Kumar in சமூகம்

மலையக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கோரிகையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக கிழக்கில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மலையக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வினை வழங்க கோரி இன்று மட்டக்களப்பு, காந்திபூங்கா முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வாழ் இளைஞர்கள், பொது அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளது.

இந்த போராட்டத்தில் மலையக மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களின் 1000 ரூபா சம்பள கோரிக்கைக்கு ஆதரவாகவும் அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மழையிலும், வெயிலிலும் பாடுபட்டு இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் மலைய மக்களின் நியாயமான கோரிக்கையினை நிறைவேற்ற நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் “எங்களை வாழவிடு, மலையக மக்களை வாழவை, ஏழை மக்களை ஒடுக்காதே,தோட்டக்கம்பனிகளின் ஏவல்காரர்களாக அரசாங்கமே செயற்படாதே” போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்க்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.