கிண்ணியாவில் தாபரிப்பு பணம் செலுத்தாது தலைமறைவாக இருந்த நபர் கைது

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கிண்ணியாவில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயினை தாபரிப்பாக செலுத்தாது தலைமறைவாக இருந்த ஒருவரை இன்று காலையில் கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா, மஹ்ரூப் நகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த சந்தேக நபர் ஒரு குழந்தைக்கு மாதாந்தம் பத்தாயிரம் ரூபாய் செலுத்தி வந்த நிலையில் பத்தொன்பது மாதங்களாக ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயினை தாபரிப்பாக செலுத்தாது தலைமறைவாக இருந்த நிலையிலே மனைவி பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு, அடுத்தக்கட்ட நடவடிக்கையாக திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Latest Offers