வவுனியாவில் அங்காடி வியாபாரிகளை அச்சுறுத்திய நகரசபைத் தவிசாளர்

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் இன்று காலை இலுப்பையடிப்பகுதியில் அங்காடி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வியாபார நிலையங்களின் உரிமையாளர்களை வவுனியா நகரசபைத்தவிசாளர் இ.கௌதமன் நேரில் சென்று தகாதவார்த்தைகளைப்பிரயோகித்து அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அங்காடி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கும்போது,

“இலுப்பையடிப்பகுதியிலுள்ள அங்காடி வியாபார நிலையங்களில் தமது வழமையான செயற்பாடுகளை தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு நடாத்திக்கொண்டிருந்தோம்.

இங்கு வந்த வவுனியா நகரசபைத்தவிசாளர் வியாபாரிகளைத்திட்டியுள்ளதுடன், தகாதவார்த்தைகளையும் பிரயோகித்து வயது வேறுபாடின்றி அச்சுறுத்தியதுடன் நடவடிக்கையிலும் ஈடுபட்டார்.

வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு உங்களுக்கு யார் அனுமதியளித்துள்ளார்கள்? என்று கோபத்துடன் நடந்துகொண்டார்.

இவ்வாறு ஒரு உயர் பதிவியிலிருந்து கொண்டு அங்காடி வியாபாரிகளை தகாத வார்த்தைகளைப்பிரயோகித்து திட்டியதுடன் நாளை திங்கட்கிழமை எவ்வாறு அங்காடி நிலையங்கள் அமைப்பீர்கள் என்றும் கூறி சென்றுவிட்டார்.

அங்காடி வியாபார நிலையங்கள் அமைத்து எமது வாழ்வாதரத்தினை மேற்கொண்டு வரும் எங்களுடன் இவ்வாறு நடந்துகொண்டுள்ள நகரசபைத்தவிசாளர் குறித்து தாங்கள் வெறுப்படைகின்றோம்.

நாங்களும் மனிதர்கள்தானே. அவர் எங்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள உரிமையுண்டு ஆனால் எமது வயது வேறுபாடின்றி தகாதவார்த்தைகளை பிரயோகித்தமையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.” என்று மேலும் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, சம்பவம் தொடர்பாக அறிந்துக்கொள்ள நகரசபைத்தவிசாளர் இ.கௌதமனுக்கு தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தியபோதும் அவரை தொடர்ப்புகொள்ள முடியவில்லை. என எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.