கிண்ணியாவில் பல மணி நேரங்கள் அடிக்கடி மின் துண்டிப்பு : மக்கள் பெரும் அவதி

Report Print Gokulan Gokulan in சமூகம்

கிண்ணியாவின் சில இடங்களில் அடிக்கடி முன்னறிவித்தலின்றி மின் துண்டிப்பு செய்யப்படுவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள் போன்றனவற்றில் உள்ள அன்றாட நடவடிக்கைகளும் மின் துண்டிப்பால் பாதிப்படைகின்றன.

பல மணிக் கணக்கில் மின் துண்டிப்பு செய்யப்படுகின்றது. இன்று காலை 09.30 மணியளவில் செய்யப்பட்ட முன்னறிவித்தலற்ற மின்துண்டிப்பு சுமார் நான்கு மணித்தியாலயம் கடந்துள்ளது.

இவ் விடயம் தொடர்பில், பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமை குறித்து மக்கள் கவலையடைகின்றனர்.

இலங்கை மின்சார சபை கிண்ணியா அலுவலகம் இவ்விடயத்தில் அசமந்தப்போக்குகளையே தொடர்ந்தும் காட்டி வருகின்றது.

மேலும், இது தொடர்பாக கிண்ணியா பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்திலும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்திலும் இம் மின் துண்டிப்பு தொடர்பாக துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனியாவது அதிக கவனம் செலுத்துவார்களா? என மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

உடனுக்குடன் சில விடயங்களுக்கு ஊடக அறிக்கையிடும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்விடயத்திலும் கரிசனை காட்டுவதுடன், மின்சார துண்டிப்புக்களை வரையறையோடும் முன்னறிவிப்பு செய்தும் துண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.