சிறைச்சாலைக் கோபுரத்தில் ஏறி 400 கைதிகள் ஆர்ப்பாட்டம்!

Report Print Manju in சமூகம்

ஹம்பாந்தோட்டை அங்குணுகொலபலஸ்ஸ சிறைக் கைதிகள் சிறைச்சாலை நிர்வாகத்தினருக்கு எதிராக இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைச்சாலையில் கடந்த சில நாட்களாக உணவு மற்றும் பிற பொருட்கள் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதால், அவற்றை சாப்பிட முடியாத நிலை காணப்படுவதாக கைதிகள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, தாங்கள் நிர்வாணமாக சோதனைக்குட்படுத்தப்படுவதாகவும்> துன்புறுத்தல்ளுக்கு ஆளாவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்புத்தெரிவித்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலை கைதிகளின் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக சிறைச்சாலை பாதுகாப்புக் கோபுரம் கைப்பற்றப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

குறித்த சிறைச்சாலையில் சுமார் 1200 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் சுமார் 400 பேர் தற்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Latest Offers