யாழில் 12 கிலோ மாவாவுடன் ஒருவர் கைது!

Report Print Sumi in சமூகம்

வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் கணேசநாதனிற்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக தெல்லிப்பழை பகுதியில் 12 கிலோ மாவாவுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவருடைய குழுவை சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் உதயானந் தலமையிலான பொலிஸ் அதிகாரிகள், முச்சக்கரவண்டியில் மாவாவுடன் சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த (41) நபர் ஒருவரை கைது செய்ததுடன், முச்சக்கரவண்டியையும் சந்தேகநபரையும், காங்கேசந்துறை பொலிஸாரிடம் பாரப்படுத்தியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை காங்கேசந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers