ஹெரோயின் விற்பனை செய்யும் இடத்தில் சிறைச்சாலை அத்தியட்சகர்!

Report Print Steephen Steephen in சமூகம்

தென் பகுதியை சேர்ந்த பிரபல பாதாள உலக தலைவரான பொடி லேசி என்பவரின் இரண்டு சகாக்கள் ஹெரோயின் விற்பனை செய்துக்கொண்டிருந்த போது கைதுசெய்யப்பட்ட நேரத்தில் அங்கு சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அதிகாரி காலி சிறைச்சாலையில் அத்தியட்சகராக கடமையாற்றி வருவதாகவும் குறித்த இடத்தில் இருந்தமை சம்பந்தமாக வாக்குமூலம் ஒன்றை வழங்க நாளைய தினம் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அறிவித்துள்ளதாகவும் மீட்டியாகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூசாசிறைச்சாலையில் அத்தியட்சகராக கடமையாற்றி வந்த இந்த அதிகாரி இரண்டு வாரங்களுக்கு முன்னர் காலி சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது எனவும் பொலிஸார் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் கடந்த 19 ஆம் திகதி மேற்படி சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து 6 ஆயிரத்து 300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சந்தேக நபர்கள் மூன்று கொலை சம்பவங்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்தவர்கள் எனவும் இது குறித்து சந்தேக நபர்களிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.