வறுமைகோட்டின் கீழ்வாழும் மக்கள் ஒருநேர உணவைக்கூட பெற்றுக்கொள்வதில் நெருக்கடி

Report Print Mohan Mohan in சமூகம்

முள்ளிவாய்க்கால் பகுதியில் வறுமைகோட்டின் கீழ்வாழும் மக்கள் ஒருநேர உணவைக்கூட பெற்றுக்கொள்வதில் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளதாக தாய் ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.

வறுமையைப் போக்குவதற்காக கொண்டுவரப்பட்ட சமுர்த்தித் திட்டத்தினூடாக வழங்கப்படும் சமுர்த்தி நிவாரணம் முள்ளிவாய்க்கால் பகுதியில் வறுமைகோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு கிடைக்கின்றதா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சமுர்த்தி திணைக்களத்தினால் வழங்கப்படும் சமுர்த்திநிவாரணம் முள்ளிவாய்க்கால் பகுதி ஏழை மக்களுக்கு கிடைக்கவில்லை.

ஓரளவு வசிதி படைத்த நகரப்பகுதி மக்களுக்கே பெரும்பாளும் சமுர்த்தி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

கிராமப்புரத்தில் வாழும் மக்கள் ஒரு நேர உணவைகூட பெற்றுக்கொள்வதில் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளார்கள்.

குறிப்பாக முள்ளிவாய்க்கால் பகுதியில் யுத்த பாதிப்புக்குள்ளாகிய ஏழை மக்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.