2990 தோட்டக்களுடன் 5 பேர் கைது: இருவர் பெண்கள்

Report Print Steephen Steephen in சமூகம்

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலக குழுவின் தலைவரான கொஸ்கொட சுஜி என்பவரின் சகா பெருந்தொகை தோட்டக்களுடன் சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சியம்பலாண்டுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து வான் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட் தோட்டக்களுடன் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரின் பயண பொதியில் இருந்து 2 ஆயிரத்து 990 தோட்டக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில் ரி.56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 2 ஆயிரத்து 958 தோட்டக்கள் எனவும் ஏனையவை 9 மல்லி மீற்றர் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டக்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஹிக்கடுவை பிரதேசத்தை சேர்ந்த லத்து ரொஷான் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜயலத் சுத்தா என்பவரின் ஆலோசனைக்கு அமைய சந்தேக நபர், தோட்டக்களை காலிக்கு கொண்டு செல்லும் வழியில் சிக்கியுள்ளார்.

சந்தேக நபர் பயணித்த வானின் சாரதி உட்பட 5 பேர் மேலதிக விசாரணைகளுக்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இவர்களில் இரண்டு பேர் பெண்கள் எனவும் சுற்றுலாப் பயணம் செல்லும் போர்வையில் இவர்கள் தோட்டக்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers