கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு நீதவான் கொடுத்த உத்தரவு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை கந்தளாயில் கொலை சம்பவமொன்றுடன் தொடர்புடை இரண்டு பேரை அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க இன்று உத்தரவிட்டார்.

கந்தளாவ, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 20 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எழுபத்தைந்து வயதுடைய முதியான்சலாகே அப்புஹாமி என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை கந்தளாவ பகுதியில் மர்மமாக உயிரிழந்தார்.

தலை மற்றும் உடம்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிக இரத்தம் வெளியேறியதன் காரணமாக குறித்த நபர் உயிரிழந்தார் எனவும் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இளைஞர்கள் இருவரை பொலிஸார் கைது செய்து இன்று கந்தளாய் நீதிமன்ற நீதிவான் வாசஸ்தலம் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers