கடலில் மாயமாகி பிரான்ஸ் தீவில் தோன்றும் இலங்கையர்கள்! யாழ்ப்பாண பெண்களும் அடங்குவதாக தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையை சேர்ந்த பலர் பிரான்ஸை அண்மித்த தீவில் குடியேறி வருவதாக வெளிவிவகார அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கு பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு படகு மூலம் பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான Réunion தீவில் குடியேறி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கைக்குள் வசிக்கும் சில குழுக்கள், இவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு கடல் வழியாக அழைத்துச் செல்வதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரான்ஸில் குடியேற விரும்பும் வடக்கு, கிழக்கு பகுதியை சேர்ந்த இளைஞர், யுவதிகளை அழைத்து வந்து சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரான்ஸ் நோக்கி சென்ற 40 பேர் கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அவர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, சிலாபம், மன்னார், திருகோணமலை உட்பட பல பிரதேசங்களை சேர்ந்த 21 சிங்களவர்களும் 67 தமிழர்களும் 2 முஸ்லிம்களும் அடங்கும். இவர்களில் பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படகு மூலம் வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் நபர்கள் உரிய விலாசம் அற்ற நபர்களுக்கு பணம் வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கையை இதேபோன்று இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக நடுகடலில் மாயமாகி Réunion தீவில் குடியேறிய நபர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest Offers