ஸார்ப் நிறுவனத்தால் அகற்றப்பட்ட 11,086 அபாயகரமான வெடிபொருட்கள்!

Report Print Yathu in சமூகம்

இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணி வெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் (Sharp) ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது இயங்கிவருகின்றது.

2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2018 ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும், கிளிநொச்சி மாவட்டத்தில்,

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் 649,613 சதுரமீற்றர் பரப்பளவில் (649,613sqm) இருந்து 11,086 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இந்த நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை பகுதியில் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தில் மொத்தம் 118 பணியாளர்கள் கண்ணிவெடியகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதில் 11 பெண் பணியாளர்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிறுவனம் நான்கு இலட்சத்து இருபத்து இரண்டாயிரத்து எண்ணூற்று இருபத்து எட்டு (422,828 sqm) நிலப்பரப்பினை மக்களின் பயன்பாட்டிற்காக அரசாங்கத்திடம் கையளித்துள்ளது. 11086 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

மேலதிக தகவல்கள் - சுமன்