யாழில் இனம் தெரியாத நபர்கள் அட்டகாசம்! பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

Report Print Sumi in சமூகம்

யாழ்.கோண்டாவில் மேற்கு தாவடி உப்புமடம் சந்திப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் மற்றும் அங்கு தரித்துநின்ற முச்சக்கரவண்டி என்பவற்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அப்பகுதியில் சற்று பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது.

இந்த சம்பவம் இன்று இரவு 7.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரண்டு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த ஐந்து பேரே இத்தாக்குதலினை மேற்கொண்டதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு கோப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அப்பகுதிக்கு தற்போது மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.