தமிழர் கலாச்சார நிகழ்வை புறக்கணித்த அரசாங்க அதிபர்

Report Print Theesan in சமூகம்

வவுனியா மாவட்ட செயலகத்தினால் இவ்வருடம் நடத்தப்பட்ட நவராத்திரி பூஜையின் வாணி விழா நிகழ்வுகளில், மாவட்ட அரசாங்க அதிபர் எம்.ஐ.ஹனீபா கலந்து கொள்ளாதமை சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தின் நலன்புரி சங்கத்தினால் வருடாவருடம் மேற்கொள்ளப்பட்டு வரும் நவராத்திரி பூஜையின் வாணி விழா நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில் அனுஸ்டிக்கப்பட்டன.

தொடர்ந்து, ஏற்பாடுகள் மேற்கொண்டவர்கள் மற்றும் சில திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்களுடன் குறித்த நவராத்திரி பூஜை அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நிகழ்வுகளின்போது மாவட்ட அரசாங்க அதிபர் கலந்து கொள்ளாமை அங்கிருந்தவர்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிவரும் எம். ஜ. ஹனீபா இவ்வாறு கலாச்சார நிகழ்வை புறக்கணித்துள்ளமை வருத்தத்திற்குரியது என கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் கடமையாற்றிய அரச அதிபர்கள் தமது வேலைப்பழுக்களுக்கு மத்தியிலும் இவ்வாறான கலாச்சார நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்த வேளையில் தற்போதைய அரசாங்க அதிபர் கலந்து கொள்ளாமை வேதனையளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.