திறந்த பல்கலைக்கழகத்தில் குறுகிய காலத்தில் பயிற்சிநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா திறந்த பல்பகலைக்கழகத்தில் பயிற்சியைப் பூர்த்தி செய்த 82 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் வவுனியா கிளையினால் நடத்தப்பட்ட ஆங்கிலம், மனிதவள முகாமைத்துவம் உள்ளிட்ட குறுகிய கால சான்றிதழ் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த 82 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, வவுனியா கற்கை நிலைய உதவிப் பணிப்பாளர் வ.திவாஸ்கர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் மீன்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான், யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக முதல்வர் மங்களேஸ்வரன் உள்ளிட்ட கல்வித்துறை சார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.