வவுனியாவில் தமிழ் இளைஞன் மீது கத்தி குத்து! விசாரணைகள் தீவிரம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - ஆச்சிபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஆச்சிபுரம் பகுதியில் வசித்து வரும் 28வயதுடைய குணலிங்கம் ஜோன்சன் என்ற இளைஞன் மீதே கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கத்தி குத்து தாக்குதலை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுவிட்ட நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers