தென்னிலங்கையில் சற்றுமுன் துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி

Report Print Shalini in சமூகம்

மாத்தறை - ஊறுபொக்க, ஹூலங்கந்தை, தம்பஹல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பஸ்கொட பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் வலஸ்முல்ல – அகுருஸ்ஸவத்த பகுதியை சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான 44 வயதான ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுத தாரிகள் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு விட்டு தலைமறைவாகி உள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.