வவுனியாவில் கைக்குண்டு உட்பட ஆயுதங்கள் மீட்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா - கனகராஜன்குளம் பகுதியிலிருந்து ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக கனகராஜன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா - கனகராஜன்குளம், மன்னகுளம் பகுதியில் வீதி ஓரத்தில் நேற்று இரவு கைக்குண்டு, மகசீன் மற்றும் அதற்குரிய ரவைகள் 30 என்பன இருப்பதாக பொலிஸாருக்கு பொது மக்களினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் அதனை பார்வையிட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

Latest Offers