வாள்வெட்டுக்காயங்களுடன் தப்பியோடிய நபர் வாகனத்துடன் மோதுண்டு படுகாயம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலையில் வாள்வெட்டுக்கு இலக்கான நபர் காயங்களுடன் தப்பியோட முற்பட்டபோது லொறி ஒன்றுடன் மோதி படுகாயமடைந்துள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர் கோமரங் கடவல, பக்மீகம பகுதியைச் சேர்ந்த டி. பி.ஐயவீர பண்டார 29 வயது எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

திருகோணமலை தனியார் நிறுவனமொன்றில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலாளி, அங்கு பணியாற்றும் இளம் பெண்ணுடன் தகாத உறவு வைத்துள்ளார்.

குறித்த நபர் பெண்ணின் வீட்டுக்கு சென்று பேசிக் கொண்டிருந்தபோது அவரது மகன் பாதுகாப்பு உத்தியோகத்தரை வாளால் வெட்டியுள்ளார். குறித்த நபர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் தப்பி ஓடிய போது லொறியுடன் மோதியதாக தெரிய வருகின்றது.

இதனையடுத்து, லொறியில் மோதி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது கால் வெட்டுக் காயங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் முன்னாள் இராணுவ வீரர் எனவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, வெட்டுக்காயங்கள் மற்றும் லொறியுடன் மோதி படுகாயமடைந்த நிலையில் உள்ள பாதுகாப்பு உத்தியோகத்தரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் மேற்படி விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சீனக்குடா பொலிஸார் கூறியுள்ளனர்.

Latest Offers