வவுனியாவில் முச்சக்கரவண்டியும், காரும் மோதி விபத்து: இருவர் படுகாயம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா, தாண்டிக்குளத்தில் சாரதி பயிற்சி வழங்கும் முச்சக்கர வண்டியும், காரும் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது,

வவுனியா, நொச்சிமோட்டையில் இருந்து தாண்டிக்குளம் நோக்கி சென்ற சாரதி பயிற்சி நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான முச்சக்கரவண்டி, வவுனியா நகரில் இருந்து வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பூனாவையை சேர்ந்த 40 வயதுடைய பிரேமவங்ச, 24 வயதுடைய இரங்க ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.