மலையக மக்களுக்கு ஆதரவாக களமிறங்கும் திருகோணமலை மக்கள்

Report Print Gokulan Gokulan in சமூகம்

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாவாக நிர்ணயம் செய்ய வழியுறுத்தும் அறவழிப் போராட்டம் ஒன்று திருகோணமலையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டம் நாளை மறுதினம் புதன் கிழமை காலை 8.30 மணிக்கு திருகோணமலை, அநுராதபுரச் சந்தியில் உள்ள சந்தைக்கு முன்னால் இடம்பெறவுள்ளது.

"உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் கைகோர்ப்போம்" எனும் தொனிப் பொருளினை உள்ளடக்கிய போராட்டமாக இது மேற்கொள்ளப்படவுள்ளது.

அகரம் மக்கள் மன்றம் மற்றும் திருகோணமலை சமூக ஆர்வலர்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers