சூடு பிடிக்கும் தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் - ஸ்தம்பிதமடையும் மலையகம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை நகர் மற்றும் லோகி தோட்ட பகுதியில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தலவாக்கலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஹேலிஸ் பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான ஹொலிரூட் தோட்டத்தை சேர்ந்த 4 பிரிவுகளிலிருந்து சுமார் 500 பேர் கலந்து கொண்டிருந்தனர்.

இவர்கள் ஹொலிரூட் தோட்ட தொழிற்சாலை முன்பாக பேரணியாக ஆரம்பித்து தலவாக்கலை நகரம் வரை ஊர்வலமாக வந்து தலவாக்கலை சுற்று வட்டத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1000 ரூபாவை அடிப்படை வேதனமாக பெற்றுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பியதோடு, சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து சுமார் 45 நிமிடங்கள் பாதிக்கப்பட்டிருந்தன.

மேலும் இந்த இரு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக மொத்தமாக 2 மணித்தியாலங்கள் ஹட்டன் - நுவரெலியா வீதியின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் பங்கேற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers