வீடு புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

Report Print Rusath in சமூகம்

ஏறாவூர் நகரிலுள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வீடு புகுந்த நபர் வீட்டிலிருந்தவருடன் தர்க்கத்தில் ஈடுபட்டு கத்தியைக் கொண்டு தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

இது குறித்து செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இவ்விடயம் தொடர்பாக விசாரணை நடாத்தி வந்த பொலிஸார் நேற்று சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Latest Offers