மாமியார் உயிரிழந்த தகவல் அறிந்த அதிர்ச்சியில் மருமகளும் உயிரிழப்பு! வவுனியாவில் சம்பவம்

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் மாமியார் உயிரிழந்து 24 மணி நேரத்திற்குள் மருமகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

“வவுனியா தரணிக்குளம், சாஸ்ரிதிகூழாங்குளம் பகுதியில் கடந்த 18ஆம் திகதி 84 வயதுடைய மாமியார் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

அவரின் இழப்பு தாங்க முடியாமல் சோகத்தில் மூழ்கியிருந்த 53 வயதுடைய மருமகள் அன்றைய தினம் இரவு மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுள்ள நிலையில் மூளையிலுள்ள நரம்பில் வெடிப்பு ஏற்பட்டு மறுநாள் 19ஆம் திகதி மருமகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு ஒரு வீட்டில் அடுத்தடுத்து மாமியும், மருமகளும் இருவர் உயிரிழந்துள்ளது அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Latest Offers