முல்லைத்தீவில் பெருமளவிலான மக்கள் மீள்குடியேற்றம்

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 43,766 குடும்பங்கள் மீள்குடியேறியிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றுள்ளது. இதன்போது மீள்குடியேற்றம் தொடர்பில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தில்,

கடந்த 2009ம் ஆண்டு யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், கரைதுரைப்பற்று, புதுக்குடியிருப்பு, வெலிஓயா ஆகிய ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இதுவரை 43,766 குடும்பங்களைச் சேர்ந்த 136,149 பேர் மீள்குடியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.