ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரி ஊர்வலம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள் அடங்கிய ஊர்வலம் ஒன்று நடைப்பெற்றுள்ளது.

இந்த ஊர்வலம் பத்தனை சந்தியிலிருந்து ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரி வளாகம் வரை இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“தைரியமாக முன்னோக்கிச் செல்வதற்கு எமது சிறுவர்களை பலப்படுத்துவோம்” எனும் தொனிப்பொருளில் நடைப்பெற்ற இந்த ஊர்வலத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலை மாணவர்கள் 100 பேர் உள்ளடங்கலாக ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியின் நிர்வாகிகள், பீடாதிபதி, உப பீடாதிபதி, விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், கல்வியற் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் பத்தனை பொலிஸார் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் “சிறுவர்களை சமூகத்தின் நற்பிரஜையாக உருவாக்குவது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும், ஓவியமான மழலைகளின் கனவுகளுக்கு உயிர் கொடுப்போம் மற்றும் நல்ல விருட்சங்களை உருவாக்க சிறுவர் எண்ணங்களில் விதை விதைப்போம்” என்று எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வுகளில் சிறுவர் உரிமை தொடர்பில் கை அச்சிடும் நிகழ்வும், வருகை தந்த பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்களும் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும், கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.

Latest Offers