ராக்கட் தயாரித்த மாணவருக்கு ஜனாதிபதி கொடுத்த இன்ப அதிர்ச்சி!

Report Print Kamel Kamel in சமூகம்

ராக்கட் தயாரித்த பாடசாலை மாணவர் ஒருவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்ப அதிர்ச்சி வழங்கியுள்ளார்.

கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலத்தில் கல்வி பயிலும் கிஹான் ஹெட்டியாரச்சி என்ற மாணவனே இவ்வாறு ராக்கட் ஒன்றை தயாரித்திருந்தான்.

குறித்த ராக்கட் சுமார் 20 கிலோ மீற்றர் வரையிலான தூரத்தைக் கடக்கக்கூடியது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாணவனின் எதிர்கால கண்டு பிடிப்புக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் மாணவனுக்கு பத்து லட்சம் ரூபா வழங்கியுள்ளார்.

இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் குறித்த மாணவனுக்கு இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

ராக்கட்டை விண்ணுக்கு ஏவுவதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு இலங்கை விமானப்படையின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இந்த சந்தர்ப்பத்தில் பணிப்புரை வழங்கியுள்ளார்.

Latest Offers