உடைந்து தொங்கிய கையுடன் பெற்றோரைக் காப்பாற்றப் போராடிய இளைஞன்

Report Print Manju in சமூகம்

கேகாலை - அவிசாவல்லா பிரதான வீதியில் பிந்தேனிய பாலத்திற்கு அருகே கார் ஒன்று குருகோட ஓயாவுக்குள் வீழ்ந்து கடந்த 18ம் திகதி மாலை விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து சம்பவத்தில் மூன்று பேர் (தாய் / தந்தை / மகன்) படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற இளைஞன் தனது கை உடைந்து தொங்கிய நிலையிலும் தனது பெற்றோர்களை நினைத்து, அவர்களைத் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சி செய்துள்ளார்.

விபத்து நடந்த சில நாட்களுக்குப் பிறகு, குறித்த இளைஞனின் நண்பன் பேஸ்புக் பக்கத்தில் குறித்த இளைஞனைப்பற்றி பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில், கார் மலையிலிருந்து விழுந்த போது நீ உன்னைப்பற்றி கவலைப்படவில்லை. உடைந்து தொங்கும் கையைப் பற்றி சிந்திக்கவில்லை.

உனது அம்மாவையும், அப்பாவையும் காருக்கு வெளியே எடுத்து, 50 அடி உயரம் வரை மலையில் ஏறி வீதிக்கு கொண்டு வந்துள்ளாய்.

கை உடைந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்த கையைப் பார்த்து மக்கள் வைத்தியசாலைக்கு செல்லுமாறு சொன்ன போதும் அம்மாவையும், அப்பாவையும் முதலில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளாய்.

நாங்கள் எல்லோரும் உன்னை நேசிக்கிறோம்... என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers