யாழ். நோக்கிய பயணித்த ரயிலில் மோதி யானை பலி!

Report Print Murali Murali in சமூகம்

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி புறப்பட்ட தபால் இரவு நேர ரயிலில் இரு யானைகள் மோதி விபத்துக்குள்ளானதில் யானையொன்று ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளது.

மற்றைய யானை பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் உயிருக்கு போராடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு பயணித்த ரயிலில் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கல்கமுவவுக்கும், அம்பன்பொலவுக்குமிடையே மீகஸ் சந்திக்கருகில் 96ஆவது மைல்கல் அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ரயிலில் மோதுண்ட இரண்டு யானைகளும் 20, 25 வயது இருக்கலாம் என்றும் இவை இரண்டும் பெண்யானைகள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

வழமையாக வரும் நேரத்தை விட 8 நிமிடங்கள் முன்கூட்டியே ரயில் வந்ததாகவும், வழமைக்கு மாறாக அதிக வேகத்துடன் ரயில் பயணித்ததாகவும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Latest Offers