இலங்கையின் ஒரு பகுதி திடீரென தாழிறங்கியமையால் பதற்றம்

Report Print Vethu Vethu in சமூகம்

கண்டி, பேராதனை பகுதியில் திடீரென வீதி ஒன்று தாழிறங்கியமையால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

டீபி. தென்னகோன் மாவத்தையின் வீதி ஒன்றின் பாரிய இடமொன்றே இவ்வாறு தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக இந்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில தினங்களாக கண்டியில் பெய்து வரும் அடைமழை காரணமாக இந்த வீதி தாழிறங்கியுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.