விடுதலைப்புலிகளின் சின்னத்துடனான துண்டுபிரசுரங்கள் விநியோகம்!

Report Print Murali Murali in சமூகம்

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட துண்டுபிரசுரங்கள் மூலம் இனம்தெரியாத நபர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

யாழில் எதிர்வரும் 24ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நடைபெறவுள்ளது.

குறித்த கூட்டத்தில் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பில் அறிவிப்பார் என தெரிய வருகிறது.

இந்நிலையில் குறித்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இன்றைய தினம் தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் வீதிகளில் வீசப்பட்டுள்ளன.

குறித்த துண்டு பிரசுரத்திற்கு தமக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், கூட்டத்தை குழம்பும் நோக்குடன் திட்டமிட்டு துண்டுபிரசுரங்கள் வீசப்பட்டு உள்ளன எனவும் மக்கள் பேரவை அறிவித்து உள்ளது.

Latest Offers