மாங்குளம் பகுதியில் யானைகளின் அட்டகாசம்! அச்சத்தில் பொதுமக்கள்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் யானைகள் இரண்டு பொதுமக்கள் வாழும் பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்துள்ளது.

இதனால் அந்த பகுதியில் வாழும் மக்கள் கடும் அச்சத்துடன் இருக்கின்றனர்.

சம்பவம் அறிந்த மாங்குளம் பொலிஸார், வனஜீவராசிகள் திணைக்களத்தினரின் உதவியுடன் இரண்டு யானைளையும் அங்கிந்து விரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாங்குளம் பகுதியில் காலபோக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அந்த பகுதி மக்கள் குறிப்பாக விவசாயிகள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers