வவுனியா பூவரசன்குளம் வைத்தியசாலையில் நோயாளர் விடுதி திறந்து வைப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா பூவரசங்களம் வைத்தியசாலையில் வட மாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் நோயாளர் விடுதியொன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியில் ஆண், பெண் இருபாலாரும் தங்கி சிகிச்சை பெறக்கூடியதாக நோயாளர் விடுதி அமைக்கப்பட்டுள்ளது.

பிரதி பிராந்திய மாகாண சுகாதார வைத்திய அதிகாரி எஸ். மகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வட மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் கலந்துகொண்டார்.

இதன்போது வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் வட மாகாணசபை உறுப்பினருமான ப. சத்தியலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தலைவர் து.நடராஜசிங்கம், பிரதேசசபை உறுப்பினர் குகதாஸ், வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி திருவேகரன், வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.செந்தூர்பதிராஜா என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers