பெற்று வளர்த்த முதலாவது பெண் குழந்தையை மனைவியாக்கிய தந்தை!

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தாவ எனும் கிராமத்தில் தான் பெற்று வளர்த்த பிள்ளையை மனைவியாக்கிய தந்தையரை இன்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான எஸ்.எச்.சவாஹிர் (42 வயது) எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

நான்கு பிள்ளைகளின் தந்தையான இவருக்கு பிறந்த முதலாவது பெண் பிள்ளை எனவும் ஏற்கனவே 20 வயதுடைய தனது மகள் திருமணம் செய்து கைவிடப்பட்ட நிலையில் தனது தந்தை, மற்றும் தாயுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இதே நேரம் தந்தையாரான 42 வயதுடைய சவாஹிர் என்பவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வருவதாக கிராம மக்களுக்கு தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து கிராமத்தில் உள்ள மக்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதுடன், அப்பகுதியில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தந்தையை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பொலிஸ் விசாரணையின் மூலம் தான் பெற்ற பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட தந்தையை கெப்பிட்டி கொல்லாவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும், விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஹொரவ்பொத்தான பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers