கொழும்பில் நடைபெறவுள்ள மலையக இளைஞர்களின் போராட்டத்தில் பொலிஸாரின் தலையீடு?

Report Print Jeslin Jeslin in சமூகம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அறவழி போராட்டத்தில் 500 பேரை விட அதிகளவானோர் ஒன்று திரள வேண்டுமாயின், பொலிஸாரின் உத்தரவை பெற வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ஏற்பாட்டுக்குழுவினர் அதற்கான நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், இந்த அறவழி போராட்டத்தை நடாத்துவதற்கான தீர்மானங்கள் மற்றும் ஏற்பாடுகள் முன்னெடுப்பதற்காக ஐந்து பேரை கொண்ட விசேட குழுவொன்றும் இன்றைய தினம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் போராட்டத்தை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தற்போது மிக தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி கொழும்பு - காலி முகத்திடலில் எதிர்வரும் 24ஆம் திகதி இந்த போராட்டம் தொடரும் என ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers