இரண்டு வருடத்திற்கு முன் நாட்டைவிட்டு அகன்ற ஆபத்து மீண்டும்! அபாயத்தில் இலங்கை

Report Print Jeslin Jeslin in சமூகம்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டில் ஒழிக்கப்பட்ட மலேரிய நோய் மீண்டும் பரவக் கூடிய அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேரிய ஒழிப்பு இயக்கத்தின் மருத்துவர் மனோநாத் மாரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு குடியேறுபவர்கள் மூலம் இந்த நோய் மீண்டும் பரவக் கூடிய அபாயம் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள், ஆபிரிக்க மற்றும் அமெரிக்க நாடுகளில் இந்த நோய் பரவலாக காணப்படுகிறது.

இந்தநிலையில் அந்த நாடுகளில் இருந்து வருகை தந்து நாட்டில் குடியேறுகின்றவர்கள் மூலம் இந்த நோய் தொற்றக் கூடும் என மலேரிய ஒழிப்பு இயக்கத்தின் மருத்துவர் மனோநாத் மாரசிங்க தெரிவித்துள்ளார்.

Latest Offers