வவுனியாவில் பல இலட்ச ரூபா செலவில் அமைக்கப்பட்ட மலசலகூடம்: மக்களின் குற்றச்சாட்டு

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் பல இலட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மலசலகூடத்தில் மது அருந்துதல் மற்றும் விடுதியாக பயன்படுத்துதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதை காணக்கூடியதாக உள்ளது என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக அமைக்கப்பட்டுள்ள புதிய மலசலகூடத்தின் நிர்மாணப் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன.

எனினும் மலசலகூடங்கள் உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவில்லை. இந்த நிலையில் குறித்த புதிய மலசலகூடத்தில் சட்டவிரோதமான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிந்துள்ளது.

அத்துடன் பொது மலசலகூடத்தில் தொழில்புரியும் நபர்களும் மலசலகூடத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

அப்பகுதியில் குடிமனைகள் சுற்றியுள்ளதால் பொதுமக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை அப்பகுதிக்கு சென்றபோது அங்கு தங்கியுள்ள இருவர் மதுபாவனையில் ஈடுபட்டுள்ளதை நேரடியாக அவதானிக்க முடிந்துள்ளது.

எனவே இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.